Home உலகம் ஒலிம்பிக்ஸ் : பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம்

ஒலிம்பிக்ஸ் : பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம்

969
0
SHARE
Ad

தோக்கியோ : 2020 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இதுவரையில் நடைபெற்ற விளையாட்டுகளின் அடிப்படையில் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. 18 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

அடுத்து 14 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஜப்பான் 13 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

பூப்பந்து போட்டிகளில் முன்னேறும் மலேசிய விளையாட்டாளர்

பூப்பந்து ஆண்கள் பிரிவில் மலேசியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் லீ ஸீ ஜியா தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். 23 வயதான அவர் உக்ரேனின் விளையாட்டாளரை 25 நிமிடங்களில் தோற்கடித்தார்.

#TamilSchoolmychoice

அடுத்து பிரான்ஸ் நாட்டின் பிரைஸ் வெவர்டெஸ் என்ற விளையாட்டாளரை அவர் சந்திக்கவிருக்கிறார். இந்த ஆட்டத்திலும் அவர் வெற்றி பெற்றால், அடுத்து 16 விளையாட்டாளர்களைக் கொண்ட சுற்றுக்கு முன்னேறுவார்.

இந்த 16 பேர் கொண்ட சுற்று என்பது நோக் அவுட் என்ற முறையில் நடைபெறும். அதாவது ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். தோல்வியடைந்தால் அடுத்த வாய்ப்பு இல்லாமல் போட்டிகளில் இருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.