Home நாடு இடைக்கால மாமன்னரைச் சந்தித்தார் லிம் கிட் சியாங்

இடைக்கால மாமன்னரைச் சந்தித்தார் லிம் கிட் சியாங்

874
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இடைக்கால மாமன்னராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா கடந்த செவ்வாய்க்கிழமை ஜசெகவின் மூத்த தலைவரும், ஆலோசகருமான லிம் கிட் சியாங் தன்னைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்கினார்.

சுல்தான் நஸ்ரின், லிம் கிட் சியாங்கை அதிகாரபூர்வமாக சந்திப்பது இதுவே முதன் முறையாகும். இந்த சந்திப்பில் கலந்து கொண்ட ஜசெகவின் தற்காப்புத் துறை துணையமைச்சர் லியூ சின் தோங் இந்தத் தகவலை வெளியிட்டு சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லியூ சின் தோங் ஜசெகவின் அரசியல் கல்விப் பிரிவு இயக்குநருமாவார்.

#TamilSchoolmychoice

இந்தச் சந்திப்பின்போது பெர்னாமா தலைவர் அனுவார் சைனி, சுங்கை பெனுட் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவ்பிக் இஸ்மாயில், பினாங்கு இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குநர் ஊய் கீ பெங் ஆகியோரும் லிம் கிட் சியாங் உடன் கலந்து கொண்டனர்.

இடைக்கால மாமன்னருடனான முதல் சந்திப்பு என்றாலும் கிட் சியாங்கும், சுல்தான் நஸ்ரினும் பல நடப்பு விவகாரங்கள் குறித்து உற்சாகமாகக் கலந்துரையாடினர்.

சுல்தான் நஸ்ரின் தனது தனது கருத்துகளையும் எண்ணங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் லியூ சின் தோங் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.