Home நாடு இந்திரா காந்தியின் கணவரைத் தேடும் முயற்சியில் காவல் துறை தொடர்ந்து இயங்கும்!

இந்திரா காந்தியின் கணவரைத் தேடும் முயற்சியில் காவல் துறை தொடர்ந்து இயங்கும்!

1139
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா: எம்.இந்திரா காந்தியின் முன்னாள் கணவரை காவல் துறையினர் தொடர்ந்து தேடி வருவதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோஶ்ரீ வான் அகமட் நஜ்முடின் முகமட் கூறினார்.

நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்திரா காந்தியின் கணவர், குழந்தையை அவரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும், ஆனால் இது நாள் வரையிலும் முகமட் ரிட்சுவான் அல்லது பத்மநாதன் எனப்படும் அந்நபர் எவராலும் கண்டறியப்படவில்லை. முகமட் ரிட்சுவானை தேடும் நடவடிக்கை 2014-ஆம் ஆண்டு மே மாதம் 30-தேதியிலிருந்து தொடரப்பட்டு வருவதாக அறிக்கை ஒன்றின் வாயிலாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இது நாள் வரையிலும் காவல் துறையினர் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளை இந்திரா காந்தியின் வழக்கறிஞருக்குத் தெரியப்படுத்திவிட்டதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, முகமட் ரிட்சுவானைப் பற்றிய தகவல் இதுவரையிலும், எந்த தரப்பினரும் முன்வந்து வாக்குமூலம் தராததால், அவரைக் கண்டறிய முடியவில்லை என காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹாருண் கடந்த வாரம் கூறியிருந்தார்.