Home நாடு 16 காளைகள் இரதத்தை இழுக்கும், இராமசாமியின் எச்சரிக்கையை மீறும் நாட்டுக்கோட்டை கோயில்!

16 காளைகள் இரதத்தை இழுக்கும், இராமசாமியின் எச்சரிக்கையை மீறும் நாட்டுக்கோட்டை கோயில்!

978
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: இரதத்தை மாடுகளை வைத்து இழுக்கும் கோயில்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பினாங்கு இந்து அறவாரியத் தலைவரும் மாநில துணை முதல்வருமான பி. இராமசாமி கூறியதை, நாட்டுக்கோட்டை செட்டியார் கோவில் அறங்காவலர் டாக்டர் ஏ. நாராயணன் நிராகரித்தார்.

“இந்து அறவாரியத்திற்கு அதற்குண்டான உரிமை இருப்பதாக தெரியவில்லை. ஆலயத்தை நிர்வகிப்பதற்கான அறங்காவலர் குழுவை நாங்கள் கொண்டுள்ளோம்என கோவில் அறவாரியத்தின் மூத்த உறுப்பினர் டாக்டர் ஏ.நாராயணன் மலேசியா கினி இணையத் தளச் செய்தியிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவின் போது காளைகளை இரதத்தை இழுக்க பயன்படுத்தி விலங்குகளை துன்புறுத்தியதாகக் கூறப்படும் கூற்றுகளை அவர் மறுத்தார்.

20 பூசாரிகள் இரதத்தின் மீது நின்றுக் கொண்டிருக்கையில், ​​காளைகள் இரண்டு, போராடி அந்த இரதத்தை இழுக்கும், காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து நாட்டுக்கோட்டை கோயில் மீது விமர்சனங்கள் எழுந்தன. 

இம்முறை 7 கி.மீ தூரத்தைக் கடப்பதற்கு சுமார் 16 காளைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், விலங்குகள் சோர்வடைந்து விடாமலிருப்பதற்கு இவ்வாறு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

இம்முறை, நாட்டுக்கோட்டை கோயில் சார்பாக காளைகள் இரதத்தை இழுக்கப் பயன்படுத்தினால், இந்து அறவாரியம் கோயிலை தங்கள் வசம் ஆக்கிக் கொள்ளும் என்று பினாங்கு துணை முதல்வருமான இராமசாமி எச்சரித்திருந்தார்.