Home நாடு தைப்பூச விழாக்களில் நாடு முழுவதும் மித்ரா சேவை முனையங்கள்

தைப்பூச விழாக்களில் நாடு முழுவதும் மித்ரா சேவை முனையங்கள்

1323
0
SHARE
Ad

புத்ராஜெயா – பிரதமர் துறை அமைச்சர்  செனட்டர்’  பொன்.வேதமூர்த்தி கண்காணிப்பின் கீழ்  செயல்படுகின்ற மித்ரா அமைப்பு (முன்பு செடிக்), நாடு முழுவதும் தைப்பூச விழா கொண்டாடப்படும் தலங்களில் தகவல் முனைங்களைத் திறந்திருக்கும் என்றும் அதற்கு பொதுமக்கள் தாராளமாக வருகை தரலாம் என்றும் மித்ரா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் மலை திருத்தலம், கெடா சுங்கைப்பட்டாணி அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம், பேராக் மாநிலத்தில் ஈப்போ கல்லுமலை திருத்தலம், சிலாங்கூர் பத்துமலைத் திருத்தலம் மற்றும் ஜோகூர் தம்போய் அருள்மிகு முனீஸ்வரர் ஆலயம் ஆகிய இடங்களில் மித்ரா தகவல் மையங்களைத் திறந்திருக்கும் என்று  அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சமுதாயத்திற்கு முனைப்புடன் செயலாற்றும் வகையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ள மித்ரா அமைப்புபுதிய மலேசியா மலர்ந்துள்ள இன்றைய நிலையில்இந்திய சமுதாயம் எதிர்கொண்டிருக்கும் பல்வேறு சமூகபொருளாதார சிக்கலை எதிர்கொள்வதும் அவற்றை சமாளிப்பதும் அத்தனை எளிதல்ல என்பதை உணர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

தொலைநோக்குப் பார்வையும் சேவை மனப்பான்மையும் கொண்டிருக்கும் மித்ராசமுதாய மறுமலர்ச்சித் திட்டங்களை துல்லியமாக வகுப்பதற்குரிய ஆலோசனைதரவுகளைப் பெறும் நோக்கில் அண்மையில்  பங்கேற்பாளர்களுடன் கூட்டங்களை நடத்தியது.

மித்ராகடந்தஆண்டு  அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஏற்பாடு செய்த பங்கேற்பாளர் கூட்டங்களில் கலந்து கொண்ட பல்வேறு வர்த்தகப் பிரமுகர்கள்அனுபவசாலிகள்கல்வியாளர்கள், இளம் தொழில் முனைவர்கள்அரசாங்க அதிகாரிகள்மகளிர் நல ஆர்வலர்கள் உள்ளிட்டோர், குழு கலந்துரையாடல் மூலம் வெளிப்படுத்திய கருத்துகளையும் தரவுகளையும் மித்ரா உள்வாங்கிக் கொண்டது.

கல்விவேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர்பல்துறைசார் தொழில்நுட்பம்நான்காம் தொழிற்புரட்சி,   குற்றத் தடுப்புஇளைஞர் மற்றும் சமூக நலம்அடையாள ஆவணம் மற்றும் உள்ளடக்கம்சமயம் உள்ளிட்ட தளங்களில் பங்கேற்பாளர் கூட்டங்கள் நடைபெற்றன.

மலேசிய சமய விழாக்களில் குறிப்பிடத்தக்க தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படும் இவ்வேளையில் பக்தர்களும் இந்தியர்களும் அனைத்து மித்ரா முனையத்திற்கும் வருகை தந்துமேல்விவரம் மற்றும் இந்திய சமுதாயத்திற்கான  அரச வாய்ப்பு குறித்தெல்லாம் அறிந்து கொள்ளலாம் என்று மித்ரா அலுவலகம் வெளியிட்ட தகவல் குறிப்பில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, புத்ராஜெயாவில் உள்ள மித்ரா தலைமை அலுவலகத்திற்கும் (03-888 662 62 / 6322) வேலை நாட்களில் மாலை 5:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.