Home நாடு வேறுபாடுகள் இருந்தாலும், கூட்டணியை பாதிக்காது!- மகாதீர்

வேறுபாடுகள் இருந்தாலும், கூட்டணியை பாதிக்காது!- மகாதீர்

678
0
SHARE
Ad

வியன்னா: நான்கு முக்கியக் கட்சிகளை உள்ளடக்கிய நம்பிக்கைக் கூட்டணியில், அக்கட்சிகளுக்குள் ஒரு சில விவகாரங்களினால் சர்ச்சைகள் ஏற்பட்டாலும், இந்நிலைமை,கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது என்று பிரதமர் மகாதீர் முகமட் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் தற்போது நாட்டினை நல்ல முறையில் ஆட்சி செய்தும், செயல்பட்டு வருவதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

இந்த நான்கு கட்சிகளும் வலுவாக உள்ளன. நாங்கள் ஒரு முடிவை எடுக்கும்போது அனைவரின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். இம்மாதிரியான சூழலில் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் நாங்கள் அதை ஏற்றுக் கொள்ள முடியும்என்று பிரதமர் கூறினார்.