Home நாடு பினாங்கு: எஸ்யூவி ரக வாகனமும், ஓட்டுனரின் சடலமும் மீட்பு!

பினாங்கு: எஸ்யூவி ரக வாகனமும், ஓட்டுனரின் சடலமும் மீட்பு!

961
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: கடந்த ஞாயிற்றுக்கிழமை பினாங்குப் பாலத்திலிருந்து கடலுக்குள் விழுந்த எஸ்யூவி ரக வாகனத்தை மீட்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) 3:00 மணியளவில் தொடங்கப்பட்ட நிலையில், மாலை 6:07 மணியளவில் காரும், காரில் பயணம் செய்த ஓட்டுனரின் சடலமும் மீட்கப்பட்டது.

நேற்று (திங்கட்கிழமை) மாலை 4:00 மணியளவில் அவ்வாகனம் இருக்கும் இடத்தினையும், அதன் ஓட்டுனரின் சடலத்தையும் மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர். ஆயினும், கடலின் நீர் மட்டமும், வேகமான அலைகளும் முக்குளிப்பு வீரர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதனைக் கருத்தில் கொண்டு அவ்வாகனத்தை மீட்கும் பணி நிறுத்தப்பட்டது என்று செபெராங் பெராய் மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி நிக் ரோஸ் அஷான் நிக் அப்துல் ஹாமிட் கூறினார்.

சுமார் 40 முக்குளிப்பு வீரர்கள் காரையும், இறந்தவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மஸ்டா சிஎக்ஸ்பை (Mazda CX-5) எனப்படும் எஸ்யூவி ரக வாகனத்தைச் செலுத்திய மொய் யுன் பெங் எனும் இளைஞரின் காரை, டொயோடா வியோஸ் ரக காரொன்று மோதியதால், கட்டுப்பாட்டை இழந்த எஸ்யூவி ரக வாகனம் கடலுக்குள் விழுந்தது. இதற்கிடையே, டொயோடா வியோஸ் காரை ஓட்டி வந்த ஆடவன் பாயான் பாருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.