Home உலகம் கழுத்தறுப்பு சைகை காட்டிய இலங்கை அதிகாரி மீது நடவடிக்கை இல்லை!- இலங்கை அரசு

கழுத்தறுப்பு சைகை காட்டிய இலங்கை அதிகாரி மீது நடவடிக்கை இல்லை!- இலங்கை அரசு

1604
0
SHARE
Ad

கொழும்பு: கடந்த 2018-ஆம் ஆண்டு, பிப்ரவரி 4-ஆம் தேதி, இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டம், பிரிட்டன் தூதரகத்தில் இடம்பெற்ற போது, அத்தூதரகத்திற்கு வெளியே புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

அந்ந சம்பவத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, கழுத்தை அறுப்பது போன்று சைகை காட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டது. அது குறித்த காணொளிகளும் பரவலாகக் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

கடந்த ஜனவரி 21-ஆம் தேதி, இந்த விவகாரம் குறித்து, பிரியங்கனை கைது செய்ய இலண்டன் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவு விடுத்திருந்தது.

#TamilSchoolmychoice

இதனை அடுத்து,  பிரிட்டனுக்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதாவது, வியன்னா மாநாட்டு உடன்படிக்கையின்படி, கடமைகளுக்காக பிரிட்டனிற்கு வருகைத் தந்த அரசுத் தந்திர அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது என பிரிட்டனுக்கான இலங்கை தூதரகம் கூறியது.

தற்போது, பிரியங்க பெர்னாண்டோ பிரிட்டனில் வசிக்கவில்லை எனவும் இலங்கை தெரிவித்தது.