Home நாடு 16 மலேசிய மாமன்னர்கள் வரிசை

16 மலேசிய மாமன்னர்கள் வரிசை

3314
0
SHARE
Ad

கோலாலம்பூர் – உலகிலேயே மிகவும் வித்தியாசமான, புதுமையான, அதே வேளையில் நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் மன்னராட்சி முறையைப் பின்பற்றி வரும் மலேசிய நாட்டின் 16-வது மாமன்னராக இன்று பகாங் மாநில ஆட்சியாளர் சுல்தான் தெங்கு அப்துல்லா பதவியேற்றிருக்கிறார்.

அந்த வரிசையில் இதுவரை பதவி வகித்த 15 மாமன்னர்களின் வரிசையை இங்கே காணலாம்:மலேசிய அரசியலமைப்பு சட்டத்திற்கேற்ப அனைத்து மலாய் ஆட்சியாளர்களும் கடந்த 60 ஆண்டுகளில் முறையாக தங்களின் வரிசைப்படி மாமன்னர்களாகப் பதவியேற்று மலேசியர்களை நன்முறையில் வழிநடத்தி வந்திருக்கின்றனர்.

இவர்களில் கெடா சுல்தான் மட்டும் தன் வாழ்நாளில் இருமுறை மாமன்னராகப் பதவி வகிக்கும் அதிர்ஷ்டத்தைப் பெற்றிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்த மாமன்னர்களின் வரிசையில் அனைத்து ஆட்சியாளர்களும் முறையே தங்களின் பதவிகளை வகித்து வந்த நிலையில், கிளந்தான் ஆட்சியாளர் சுல்மாட் முகமட் மட்டுமே பதவியிலிருந்து விலகிய முதல் மாமன்னராகத் திகழ்கிறார்.