Home இந்தியா பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது – பிரபு தேவாவுக்கு பத்மஸ்ரீ

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது – பிரபு தேவாவுக்கு பத்மஸ்ரீ

1027
0
SHARE
Ad

புதுடில்லி – இன்று கொண்டாடப்படும் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்த நிலையில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. முறையே பத்மவிபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு பல கலைஞர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

கேரளாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லாலுக்கு பத்ம்பூஷன் விருது வழங்கப்படுகிறது. இது மூன்றாவது உயரிய விருதாகும்.

பாடகர் ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் எனப்படும் மத்தளங்களில் வித்தை காட்டும் சிவமணி, பிரபல நடன இயக்குநர் பிரபுதேவா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.