Home கலை உலகம் அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படம் – உயர்ந்த மனிதன்

அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படம் – உயர்ந்த மனிதன்

968
0
SHARE
Ad

சென்னை – அகில இந்திய நட்சத்திரமாக உலகம் எங்கும் தெரிந்தவராக இருந்தாலும், அமிதாப் பச்சன் இதுவரை நேரடித் தமிழ்ப் படம் எதிலும் நடித்ததில்லை.

இப்போது முதன் முறையாக ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தில் நடிக்கிறார் அமிதாப் பச்சன். இதற்காக 40 நாட்கள் படப்பிடிப்புக்காக நாட்களை ஒதுக்கித் தந்திருக்கிறார் அமிதாப்.

சிறந்த இயக்குநர்களில் ஒருவரும் அண்மையக் காலமாக பல படங்களில் தனது நடிப்பால் கலக்கி வருபவருமான எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

#TamilSchoolmychoice

‘உயர்ந்த மனிதன்’ படத்தை தமிழ்வாணன் இயக்குகிறார். இந்தப் படத்தின் முதல் தோற்றக்காட்சியை அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கிறார்.

இந்தப் படம் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.