Home நாடு இசிஆர்எல்: நாட்டின் கடனை அதிகரிக்கும், அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும்!

இசிஆர்எல்: நாட்டின் கடனை அதிகரிக்கும், அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும்!

875
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிழக்குக் கடற்கரை இரயில் பாதை (இசிஆர்எல்) திட்டம் குறித்து தற்போதைக்கு எந்த ஒரு கருத்தையும் வெளியிட வேண்டாமென்று, பிரதமர் மகாதீர் முகமட், அறிவுறுத்தி இருப்பதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறியுள்ளார். 

அனைத்து தரப்பினரும் இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கைக்கு காத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, இந்த திட்டமானது , நாட்டின் கடனை மேலும் அதிகரிக்கும் என பிரதமர் குறிப்பிட்டிருந்தார். ஆயினும், விரைவில் நிதி அமைச்சு இத்திட்டம் குறித்து அறிவிக்கும் என பிரதமர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, இசிஆர்எல் திட்டம் குறித்து நிதி அமைச்சர் லிம் குவான் எங் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர், டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி இருவருக்கும் இடையே மாற்று கருத்துகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.