Home கலை உலகம் கஜா புயல்: மக்களுக்கு வீடு கட்டிக்கொத்த சூர்யா, கார்த்தி இரசிகர்கள்!

கஜா புயல்: மக்களுக்கு வீடு கட்டிக்கொத்த சூர்யா, கார்த்தி இரசிகர்கள்!

937
0
SHARE
Ad

 

சென்னை: தமிழகத்தைத் தாக்கிய கஜா புயலினால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்த மக்களுக்கு, நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் இரசிகர்கள் வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளனர்நடிகர்களின் படங்களுக்கு அபிசேகம் செய்து பணத்தை வீணடிக்கும் இதர நடிகர்களின் இரசிகர்களுக்கு மத்தியில், இவர்களின் இந்தச் செயல் பாராட்டுக்குரியது.

#TamilSchoolmychoice

இப்புயலினால் விவசாய நிலங்களும், விவசாயிகளுக்கு அளவற்ற இழப்புகளும் நேர்ந்தன. பல பிரபலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியும் பொருளுதவியும் வழங்கி உதவினர். நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி குடும்பத்தினர் 50 லட்சம் ரூபாய் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினர்.  இதனைத் தொடர்ந்து சூர்யாகார்த்தி இரசிகர்கள் இந்தக் களப்பணியில் இறங்கி புயலால் பாதித்தவர்களுக்கு உதவிப் புரிந்து வந்தனர்.

தஞ்சை மாவட்ட, கிராமப் பகுதியில் உள்ள, 50 குடும்பங்களுக்கு  வீடுகள் கட்டித் தரும் பணியைத் தொடங்கியுள்ளனர்.