Home நாடு தேர்தல் ஆணையம்: மனோகரன் மீது காவல் துறையில் புகார்!

தேர்தல் ஆணையம்: மனோகரன் மீது காவல் துறையில் புகார்!

753
0
SHARE
Ad

கேமரன் மலை: கேமரன் மலை இடைத் தேர்தலில், 1954-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் தவறிழைத்ததற்காக, நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் எம். மனோகரனுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நேற்று (திங்கட்கிழமை) காவல் துறையில் புகார் செய்தது என அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தது.

கட்சிச் சின்னத்தைக் கொண்டிருந்த சட்டையை அணிந்து வாக்குப் பதிவு செய்யப்படும் இடத்திற்குள் நுழைந்ததற்காக அவர் மீது இப்புகார் செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

அவர் மீதான நடவடிக்கையை மேற்கொள்ள காவல் துறையிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதாக, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது. தேர்தல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறும் எந்தவொரு கட்சி மற்றும் வேட்பாளர்களுடன், தேர்தல் ஆணையம் துணை போகாது என அது குறிப்பிட்டிருந்தது. 

இதற்கிடையில், வெளிப்படையான, நியாயமான தேர்தல் நடைமுறையை செயல்படுத்தப்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் அனைத்து தேர்தல் சட்டங்களையும், அனைத்துக் கட்சிகளும் எப்போதும் புரிந்து செயல்பட வேண்டும் என அது நினைவுப்படுத்தியது.