Home நாடு ஊழலை துடைத்தொழிக்க 5 வருடத் திட்டம் அறிமுகம்!

ஊழலை துடைத்தொழிக்க 5 வருடத் திட்டம் அறிமுகம்!

831
0
SHARE
Ad

புத்ராஜெயா: மலேசியாவை 2023-ஆம் ஆண்டளவில், ஓர் ஊழலற்ற நாடாக மாற்றுவதற்கான நோக்கத்துடன், அரசாங்கம் ஐந்து வருட தேசிய ஊழல் எதிர்ப்புத் திட்டத்தை (NACP) ஆரம்பித்துள்ளது. அதன் அறிமுக விழா இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் மகாதீர் முகமட்டால் தொடக்கி வைக்கப்பட்டது.

கடந்த காலத் தவறுகளை கண்டறிவதில் மட்டும் முனைப்புக் காட்டாமல், எதிர்காலத்தில் இது மாதிரியான ஊழல்கள் நடக்காமல் தடுப்பதற்காகவும், இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது என பிரதமர் கூறினார்.

இது எளிதான ஒரு காரியம் அல்ல, ஆனால் நல்ல ஆட்சி மற்றும் ஒருமைப்பாட்டின் அடிப்படையிலான கலாச்சாரம் மற்றும் நடைமுறையை உருவாக்குவதற்கான அடித்தள கொள்கைகளை வைப்பதன் மூலம் நாம் இதனைத் தொடங்கலாம்” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த திட்டமானது 22 திட்டமுறைகளையும், 115 முன்முயற்சிகளையும் கொண்டிருக்கும் வேளையில், ஆறு முக்கியமான துறைகளில் வலுவானக் கவனத்தை செலுத்த இருக்கிறது, அதாவது அரசியல், பொதுக் கொள்முதல், சட்ட அமலாக்கம், பொதுத்துறை நிருவாகம், சட்டம், நீதித்துறை மற்றும் நிறுவன ஆளுகைகளில் (Corporate governance) தீவிரமாக இயங்கும் எனக் கூறப்படுகிறது.