Home நாடு வாழ்க்கை செலவினங்களால் மக்கள் அவதி, களைய வழிகள் தேடப்படும்!- மகாதீர்

வாழ்க்கை செலவினங்களால் மக்கள் அவதி, களைய வழிகள் தேடப்படும்!- மகாதீர்

762
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிராமப்புற மக்களின் மனதில் இடம் பிடிப்பதற்காக அரசாங்கம், அவர்களின் பொருளாதார சுமையைக் குறைக்கும் வழிகளைத் தேட வேண்டும் என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார்.  கடந்த சனிக்கிழமை கேமரன் மலை இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி தோல்வி அடைந்தது குறித்து பிரதமர் இவ்வாறு கருத்துரைத்தார்.

மக்கள் எதனால் மகிழ்ச்சியாக இல்லை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். வாழ்க்கை செலவினங்கள் உயர்ந்ததால் அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதித்திருப்பது நமக்கு தெரியும்” என பிரதமர் கூறினார்.

கிராமப்புறங்களில் தேசிய முன்னணியின் தாக்கம் இன்னும் வலுவாக இருப்பதாக அவர் கூறினார். ஆகவே, கேமரன் மலை வெற்றி குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என மகாதீர் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், தேசிய முன்னணி இனப் பிரச்சனைகளைக் கையாண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஆயினும், மக்களின் தேர்வை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக மகாதீர் தெரிவித்தார்.