Home நாடு சாலைப் போக்குவரத்து குற்ற அபராதங்களுக்கு இனி தள்ளுபடி இல்லை!

சாலைப் போக்குவரத்து குற்ற அபராதங்களுக்கு இனி தள்ளுபடி இல்லை!

834
0
SHARE
Ad

சிப்பாங்: சாலைப் போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராதக் கட்டணங்களுக்கு விதிக்கப்படும் தள்ளுபடியை நிறுத்தக் காவல் துறை மற்றும் உள்துறை அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார். தற்போது, ​​சாலை போக்குவரத்துத் துறை (ஜேபிஜே), போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராதக் கட்டணத்திற்கான தள்ளுபடிகளை இரத்து செய்துள்ளது.

சாலை விபத்துகளை குறைக்கும் அதே வேளையில், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாத வாகன ஓட்டுனர்களுக்கு, தவறு செய்தால் அபராதம் விதிக்கப்படும் எனும் அச்சத்தை ஏற்படுத்தவே இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக அவரது உரையில், தமது இந்த முடிவினால், சமூக ஊடகங்களில் பல்வேறு எதிர்ப்புகளை தாம் சந்தித்து வந்தாலும், அவற்றைக் கண்டு, தாம் பின்வாங்கப் போவதில்லை எனக் கூறினார்.

ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 12-ஆம் தேதி வரையிலும், வாகனஓட்டிகளின் நடவடிக்கைகள் மீது கண்காணிப்பு நடத்தப்படும் எனவும், இதற்காக 15,000 அமலாக்க மற்றும் நெடுஞ்சாலை ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.