Home இந்தியா ஜெயலலிதாவுக்கு புலிகள் அனுப்பி வைத்த கடிதம்

ஜெயலலிதாவுக்கு புலிகள் அனுப்பி வைத்த கடிதம்

624
0
SHARE
Ad

jeyaசென்னை, ஏப்ரல் 2- வன்னிப் போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் முழுத்தமிழகமும் தமிழீழ மக்களுக்கு உறுதுணையாக அணிதிரண்டு நின்ற அவ்வேளையில் தமிழகத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகள் சூடிபிடித்திருந்த சூழலில் டில்லியையும், கொழும்பையும் அதிரவைத்த அதிரடியான கருத்து ஒன்றை செல்வி ஜெயலலிதா அவர்கள் வெளியிட்டிருந்தார்.

25.04.2009 அன்று தமிழகம் சேலத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே இக்கருத்தை செல்வி ஜெயலலிதா வெளியிட்டிருந்தார்.

அதாவது தனி ஈழமே தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வு என்றும், தனது சொல்லுக்குக் கட்டுப்படக்கூடிய அரசாங்கம் புதுடில்லியில் அமையும் பட்சத்தில் இந்தியப் படைகளை அனுப்பித் தமிழீழத்தை தான் நிச்சயம் நிறுவிக் கொடுப்பார் என்றும் தனது தேர்தல் பரப்புரையில் செல்வி ஜெயலலிதா சூளுரைத்திருந்தார்.

#TamilSchoolmychoice

இதனையடுத்து மறுநாள் 26.04.2009 அன்று தமிழீழ தேசியத் தலைவரின் செய்தியை உள்ளடக்கிய கடிதம் ஒன்று, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரால் செல்வி ஜெயலலிதாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத் தலைப்பில், கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்ட அக்கடிதம் பின்வருமாறு அமைந்திருந்தது:-tamil-eelam