Home கலை உலகம் யாஷிகா : தமிழகத் தொலைக்காட்சிகளில் இரசிகர்களை அதிகம் கவர்ந்த பெண்

யாஷிகா : தமிழகத் தொலைக்காட்சிகளில் இரசிகர்களை அதிகம் கவர்ந்த பெண்

1974
0
SHARE
Ad

சென்னை – தமிழகத்தின் தொலைக்காட்சிகளில் வெளிவரும் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள், நாடகத் தொடர்கள் ஆகியவற்றில் இரசிகர்களை அதிகம் கவர்ந்த பெண்ணாக யாஷிகாவை சென்னை டைம்ஸ் என்ற ஊடகம் தேர்ந்தெடுத்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு வெளிவந்த, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவராக வலம் வந்த யாஷிகா அந்த நிகழ்ச்சியின் தாக்கத்தின் காரணமாகவும், தனது துணிச்சலான கருத்துகளின் காரணமாகவும் அதிகமான இரசிகர்களை ஈர்த்துள்ளார்.

அவருக்கு அடுத்த நிலையில் வருபவர் தொலைக்காட்சி ஊடகத்தில் 20 ஆண்டுகளை நிறைவு செய்யும் டிடி என்ற திவ்யதர்ஷனி. இவரும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி ஊடகத்தில் பெரும்பாலும் நிகழ்ச்சிகள் படைப்பவராவார்.

#TamilSchoolmychoice

15 பேர் கொண்ட இந்த வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பின்வருமாறு:

  1. யாஷிகா
  2. திவ்யதர்ஷனி
  3. வாணி போஜன் (தெய்வமகள்)
  4. நட்சத்திரா நாகேஷ்
  5. ஷரண்யா துராடி சுந்தர்ராஜ்
  6. கிக்கி விஜய்
  7. சைத்ரா ரெட்டி
  8. பாவனா பாலகிருஷ்ணன்
  9. அல்யா மனசா
  10. ஷ்ரேயா அஞ்சன்
  11. வைகா
  12. பவானி ரெட்டி
  13. லஸ்யா நாகராஜ்
  14. மணிமேகலை
  15. ஷபனா ஷாஜஹான்