Home நாடு அடிப்படை உரிமையான குடிநீர் இல்லாத அவலம், இராமசாமி சாடல்!

அடிப்படை உரிமையான குடிநீர் இல்லாத அவலம், இராமசாமி சாடல்!

609
0
SHARE
Ad

சுங்கைப் பட்டாணி: சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக, சாடா எனப்படும் கெடா மாநில நீர் விநியோக நிறுவனம், 22,000 ரிங்கிட் நீர் கட்டணத்தைச் செலுத்தாதக் காரணத்தால் ஒருதலைபட்டசமாக சுங்கை கெத்தா தோட்டத்தின் சுமார் 50 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கான நீர் விநியோக இணைப்பைத் துண்டித்துள்ளது.

இது குறித்து மலேசியா கினி செய்தி நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றினை எழுதிய, பினாங்கு மாநிலத் துணை முதல்வர், பி. இராமசாமி, பத்து வருடங்களுக்கும் மேலாக காத்திருந்து, குடியிருப்பாளர்கள் தங்களுக்கான நீரைப் பெறுவதற்கு கிணறு தோண்டியும், அதனால் எந்தவொரு பலனும் இல்லாது போனதாகக் கூறினார். சமீபத்தில், அக்கிணறுகளிலிருந்த அசுத்தமான நீரினால் சுகாதாரப் பிரச்சனைகளும் எழுந்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தண்ணீர் பிரச்சனை மட்டுமல்லாது, அத்தோட்ட மக்களுக்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆயினும், மின்சார ஜெனரேட்டர்களை பயன்படுத்தி, அதன் மூலம் குடியிருப்பாளர்கள் மின்சாரப் பிரச்சனையை சமாளித்து வருவதாக இராமசாமி கூறினார்.

#TamilSchoolmychoice

நீர் கட்டணங்கள் நிவுவையில் இருந்தாலும்,  தேசிய நீர் சேவை ஆணையம் (ஸ்பான்) விதித்த கட்டுப்பாடுகளின்படி, நீர் நிறுவனங்கள், நீர் விநியோகத்தைத் துண்டிக்க முடியாது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் நீர் வழங்கலின் மறு இணைப்புக் குறித்து சாடா நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தப் போவதாகக் கூறியுள்ளதை, இராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தனியார் நிலப்பகுதியில் வாழ்ந்தாலும்கூட, குடியிருப்பவர்களுக்கு நீர் விநியோகத் தடையை விதித்திருப்பது கொடூரமான செயல் எனவும், அத்தகைய ஒரு மனிதாபிமானமற்ற நடவடிக்கை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து சாடா நிறுவனம் பொறுப்பற்றக் காரணங்களைத் தருவதாக இராமசாமி சாடினார்.

மிகப் பெரிய அளவில் வாக்குறுதிகளை கொடுத்து, அடிப்படை உரிமையான, குடிநீர் இல்லாது அவதிப்படும் மக்கள் இருக்கும் பட்சத்தில், அந்த வாக்குறுதிகளால் எந்தவிதப் பயனும் இல்லை என அவர் கூறினார்.