Home கலை உலகம் ஏ.ஆர். முருகதாஸுடன் இணையும் ரஜினிகாந்த்!

ஏ.ஆர். முருகதாஸுடன் இணையும் ரஜினிகாந்த்!

1088
0
SHARE
Ad

சென்னை:  பேட்ட திரைப்படத்திற்குப் பின்பு, ரஜினிகாந்த் திரையுலகை விட்டு வெளியேறலாம் எனும் கருத்துகள் இருந்தன. ஆயினும், அவை தவறு என நிரூபிக்கும் வண்ணம், தற்போது இயக்குனர் ஏ. ஆர் . முருகதாஸுடன் கைக்கோர்க்க இருக்கிறார் ரஜினிகாந்த்.

இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் காவல் அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகவல் உண்மையாக இருப்பின், நீண்ட காலத்திற்குப் பிறகு ரஜினியைக் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் பார்க்கும் வாய்ப்பை இரசிகர்கள் பெற்றிருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அடுத்தக்கட்ட நடிகர், நடிகைகளை தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகிவரும் ரஜினிகாந்தின் அரசியல் வருகை எதிர்பார்த்ததைப் போல மீண்டும் தள்ளிப் போகலாம் எனக் கூறப்படுகிறது.