Home நாடு பெற்றோர்களை தவிக்கவிடும் பிள்ளைகள் மீது சட்டம் பாயலாம்

பெற்றோர்களை தவிக்கவிடும் பிள்ளைகள் மீது சட்டம் பாயலாம்

1390
0
SHARE
Ad

சிரம்பான்: தேசிய ஒற்றுமை, சமூக நல அமைச்சர் செனட்டர் பொன். வேதமூர்த்தி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தாமான் ராசாவில் உள்ள டோங் சிம் முதியோர் இல்லத்திற்கு வருகை மேற்கொண்டார். இந்த இல்லத்தில், பிள்ளைகளால் கைவிடப்பட்ட சுமார் 10 முதியோர்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த இல்லத்திற்கு 20,000 ரிங்கிட் நிதியுதவியை வழங்கிய அமைச்சர், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட பெற்றோர்களைப் பாதுகாக்கும் புதிய சட்டம் ஒன்றினை உருவாக்க அரசாங்கம் முயற்சிகள் எடுக்கும் எனவும், அதனைக் குறித்த ஆழமான ஆய்வுகள் நடத்தியப் பின்பு இச்சட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறினார்.

வேண்டுமெனே பெற்றோர்களை தனிமையில் தவிக்க விடுபவர்கள், மன ரீதியிலான தாக்கத்தை அவர்களுக்கு உண்டாக்கும் பிள்ளைகளின் மீது கடுமையான சட்டம் பாய வேண்டும் என புத்ரா பல்கலைக்கழக மனித மேம்பாடு மற்றும் குடும்ப ஆய்வுகள் துறைத் தலைவர் பேராசிரியர் ரகிமா இப்ராகிம் வெளியிட்டக் கருத்திற்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.