எமிலானோ சாலாவையும், விமானியையும் தேடும் பணிகள் கடந்த வாரம் நிறுத்தப்பட்டது. ஆயினும், விமானத்தின் இரு இருக்கைகளை மீட்புக் குழுவினர் கண்டெடுத்த நிலையில், மீண்டும் அப்பகுதியில் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் இயந்திரத்தைக் கொண்டு விமானம் இருக்கும் இடத்தை பிரிட்டன் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (எஎஐபி – Air Accidents Investigation Branch) கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து எமிலானோவின் குடும்பத்தினருக்கு காவல் அதிகாரிகள் தெரியப்படுத்திவிட்டதாகவும், இன்று திங்கட்கிழமை இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை எஎஐபி அமைப்பு வெளியிடும் எனக் கூறப்படுகிறது.