Home உலகம் எமிலானோ சாலாவை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன!

எமிலானோ சாலாவை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன!

1612
0
SHARE
Ad

இலண்டன்: அர்ஜெண்டினாவின் காற்பந்து விளையாட்டாளர் எமிலானோ சாலா மற்றும் அவர் பயணம் செய்த விமானத்தின் விமானியைத் தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்தக் கட்டத்தில் அவர் உயிர்வாழும் வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ள நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் காவல் துறையினர் குறிப்பிட்டனர்.

கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 21) பிரான்சிலிருந்து கார்டிப் நகருக்கு சிறிய ரக விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்த போது அந்த விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

மீட்புப் பணியாளர்கள் விமானத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்து வந்தனர்.  ஆயினும், விமானத்தின் பாகங்களைத் தவிர பயணம் செய்தவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் காவல் துறையினர் கூறினர்.

கடந்த புதன்கிழமை, எமிலானோவின் குடும்ப செய்தித் தொடர்பாளர், மார்டின் மொல்டனி கூறுகையில்,எமிலானோவைத் தேடுவதற்கான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி, அவரைத் தேடும் பணியைத் தொடர வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டும்எனக் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே, நேற்று (வியாழக்கிழமை) எமிலானோவின் உருவப்படம் நகரின் ஒரு தெருவில் வைக்கப்பட்டது. பொதுமக்கள் மலர்கள், மெழுகுவர்த்திகள் மற்றும் அனுதாப அட்டைகளை வைத்து, துக்கத்தை அனுசரித்து வரும் படங்கள் சமூக மற்றும் செய்தித் தளங்களில் இடம்பெற்று வருகிறது.