Home நாடு கேமரன் மலை: தேர்தல் ஆணையம் முழு தயார் நிலையில் உள்ளது!

கேமரன் மலை: தேர்தல் ஆணையம் முழு தயார் நிலையில் உள்ளது!

909
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாளை சனிக்கிழமை (ஜனவரி 26-ஆம்) தேதி நடைபெற இருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் முழுத் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் கூறினார்.

வாக்களிப்பு தினத்தன்று மொத்தம் 811 அதிகாரிகள், 29 வாக்குச் சாவடிகள் மற்றும் 86 வாக்குப்பதிவு நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவர் என அவர் கூறினார். வாக்குப் பெட்டிகள் மற்றும்  வாக்காளர் மை போன்ற முக்கிய சாதனங்களைப் பரிசோதித்து வருவதாகவும் அவர் கூறினார்.

நாளை நடைபெற இருக்கும் இடைத் தேர்தலில், பொதுமக்கள் கடைசி நேரம் வரையிலும்  காத்திருக்காமல், கூடுமான வரையில் காலையிலேயே தங்களது கடமைகளை நிறைவேற்றி விடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.