கேமரன் மலை: நாளை சனிக்கிழமை (26-ஆம் தேதி) நடக்க இருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் எம். மனோகரன் வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என பிரதமர் கூறியதற்கு பெர்சாத்து கட்சித் தலைவரும், உள்துறை அமைச்சருமான டான்ஶ்ரீ மொகிதின் யாசின் மறுப்புத் தெரிவித்தார்.
இடைத் தேர்தல்களில், பெரும்பாலும், பிரதமர் களம் இறங்குவது அரிது. ஆயினும், இம்முறை கேமரன் மலை இடைத் தேர்தலில் வெற்றியடைவதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பிரதமர் களம் இறங்குகிறார் என மொகிதின் தெரிவித்தார்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் கேமரன் மலையில் பிரதமர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.