Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியா: தேர்தலின் போது தவறாக வாட்சாப்பை பயன்படுத்தினால் சேவை தடை செய்யப்படும்!

இந்தியா: தேர்தலின் போது தவறாக வாட்சாப்பை பயன்படுத்தினால் சேவை தடை செய்யப்படும்!

928
0
SHARE
Ad

புது டெல்லி: இந்திய அரசியல் கட்சிகள் வாட்சாப்பை தேர்தல் பிரச்சாரத்திற்காக தவறாகப் பயன்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய மின்னியல் உலகில் தேர்தலை சந்திக்கும் அரசியல் கட்சிகள் இணையம் வழி, அதுவும் குறிப்பாக சமூக ஊடகங்களான பேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்சாப் போன்றவற்றை முக்கியத் தளமாகப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாட்சாப்பை, ஒரு சில அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது குறித்து வாட்சாப் தகவல் தொடர்புத் தலைவர் கார்ல் வோக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

வாட்ஸ்சாப் உருவாக்கப்பட்ட நோக்கத்தை நன்கு புரிந்து கொண்டு, அதற்கு மட்டும் அதனை பயன்படுத்துவது சிறப்பு என அவர் கூறினார். எந்த காரணத்தைக் கொண்டும் வாட்சாப்பை தவறாக பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளை அவர் எச்சரித்தார். 

இந்த எச்சரிக்கையை மீறி தவறாக பயன்படுத்தினால் வாட்சாப் சேவையை தடை செய்ய வேண்டியிருக்கும் எனவும் அவர் கூறினார். அத்துடன் இந்த செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து அதனை தடுக்கவும் பல்வேறு முயற்சிகளை அந்நிறுவனம் மேற்கொள்ளும் என அவர் தெரிவித்தார்.