Home நாடு இடைநிலைத் தமிழ்ப் பள்ளி அமைக்க கால அவகாசம் தேவை – இராமசாமி

இடைநிலைத் தமிழ்ப் பள்ளி அமைக்க கால அவகாசம் தேவை – இராமசாமி

1152
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – 14-வது பொதுத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான தமிழ் இடைநிலைப் பள்ளி அமைப்பது என்ற வாக்குறுதியை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் ஆனால் அதற்கு சற்ற கால அவகாசம் தேவை என்றும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி கூறியுள்ளார்.

தமிழ் இடைநிலைப் பள்ளி அமைப்பதில் கால தாமதம் ஏற்படுவதை இந்திய சமூக இயக்கங்களும், தமிழ் ஊடகங்களும் அடிக்கடி சுட்டிக் காட்டி வருவது தொடர்பில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை  கருத்துரைத்தபோதே இராமசாமி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“இடைநிலைத் தமிழ்ப் பள்ளி அமைப்பது எங்கள் நோக்கம் என்றாலும், அதனை உடனே இன்று அறிவித்து நாளையே செயல்படுத்த முடியாது. அந்தத் திட்டத்தை செயல்படுத்த கால அவகாசம் தேவை. எனவே, அனைத்துத் தரப்புகளும் பொறுமை காக்க வேண்டும்” எனவும் இராமசாமி கேட்டுக் கொண்டார்.