Home உலகம் கண்டெடுக்கப்பட்ட சடலம் எமிலானோ சாலாவுடையதுதான்!

கண்டெடுக்கப்பட்ட சடலம் எமிலானோ சாலாவுடையதுதான்!

982
0
SHARE
Ad

இலண்டன்அர்ஜெண்டினாவின் காற்பந்து விளையாட்டாளர் எமிலானோ சாலா பயணம் செய்த விமானத்தின் உடைந்தப் பாகங்கள் கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சடலம் ஒன்றும் நேற்று மீட்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் அடையாளம் யாருடையது என்று மீட்புக் குழுவினர் அறிவிக்காத நிலையில், அது காற்பந்து விளையாட்டாளர் எமிலானோ சாலாவின் சடலம்தான் என்பதை காவல் துறையினர் உறுதிப்படுத்தினர்.

இதனிடையே, எமிலானோவிற்கு மரியாதை செய்யும் வண்ணமாக பிரான்ஸ் லீக் அணிகள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக, ஒரு நிமிட அஞ்சலி செலுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.