Home கலை உலகம் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ‘அருவி’!

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ‘அருவி’!

1524
0
SHARE
Ad

சென்னை: ‘அருவி’ திரைப்படம் அனைவரின் மனதில் நீங்காத ஓர் இடத்தினைப் பெற்றது. அத்திரைப்படம் உலகளவில் திரைப்பட விழாக்களில் அங்கீகாரத்தைப் பெற்றதோடு, அத்திரைப்படத்தில் நடித்த அதிதி பாலனுக்கு நற்பெயரையும் ஈட்டித் தந்தது.

ஒளிப்பதிவு மற்றும் திரைப்பட இயக்கத்தில் தனக்கென்ற ஓர் இடத்தினை தக்க வைத்திருக்கும், சந்தோஷ் சிவனின் இயக்கத்தில், நடிகை அதிதி பாலன், நடிக்கவுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘அருவி’ திரைப்படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் அதிதி பாலன் நடிக்கவில்லை

தனக்கு ஏற்ற கதைக்காக காத்திருந்த அதிதி, தற்போது சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும்ஜாக் அண்ட் ஜில்’ என்ற மலையாளப் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது