Home இந்தியா வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதம் 2,000 ரூபாய்!

வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதம் 2,000 ரூபாய்!

1364
0
SHARE
Ad

சென்னை: வறுமை கோட்டுக்கு கீழே உள்ள 60 இலட்சம் தொழிலாளர்களுக்கு நிதியுதவியாக மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திங்கட்கிழமை அறிவித்தார்

கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவமழையின் காரணமாகவும் ஏற்பட்டுள்ள வறட்சியால், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுதும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக மாதம் 2, 000 ரூபாய் வழங்கப்படும் என்பதை அவர் தெரிவித்தார்.

இதற்காக சுமார் 1,200 கோடி ரூபாய் 2018 மற்றும் 2019 துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.