Home நாடு திரெங்கானு: அகமட் ராசிப் மாநில எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் துறந்தார்!

திரெங்கானு: அகமட் ராசிப் மாநில எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் துறந்தார்!

894
0
SHARE
Ad

கோலா திரெங்கானு: முன்னாள் திரெங்கானு மாநில மந்திரி பெசாரும், செபெராங் தாகிர் சட்டமன்ற உறுப்பினருமான அகமட் ராசிப் அப்துல் ரஹ்மான், மாநில எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், திரெங்கானு மாநிலத்தின் முன்னாள் மாநில மந்திரி பெசாரான, டத்தோஶ்ரீ அகமட் சாய்ட்டுக்கு மாநில அம்னோத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.  இதன் காரணமாக அகமட் ராசிப் அப்பதவியிலிருந்து விலகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஹாரியான் மெட்ரோ நாளிதழின்படி, அகமட் ராசிப் தனது பதவி விலகல் கடிதத்தை கடந்த வாரம் மாநில ஆளுனர் யாயா அலிக்கு அனுப்பிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.