Home உலகம் அமெரிக்கா: பனிப்புயலால் 1600 விமானங்கள் இரத்து!

அமெரிக்கா: பனிப்புயலால் 1600 விமானங்கள் இரத்து!

781
0
SHARE
Ad

நியூயார்க்கடந்த சில வாரங்களாக அமெரிக்காவை குளிர்காலம் வாட்டி வரும் வேளையில், தற்போது, அக்கடும் குளிர், பனிப்புயலாக மாறியுள்ளது என நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் பனிக்கட்டி மழையும் பொழியத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

நியூயார்க்கில் 10 செ.மீ அளவிலும், பாஸ்டனில் 13 செ.மீ அளவிலும் பனி மூடியுள்ளது. இந்த பனிப்பொழிவால் பெரிய நகரங்கள் விரைவாக பனியால் மூடப்பட்டு வருகின்றன எனவும், பனிக்கட்டி மழை இப்போது பெய்யத் தொடங்கி உள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய வானிலை மைய இயக்குநர் டான் பீட்டர்சன் கூறியுள்ளார்.

இதன் காரணமாக 1,600 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது.