Home நாடு பெர்சாத்து கட்சி சபாவிலும் தொடங்கப்படும்!- பிரதமர்

பெர்சாத்து கட்சி சபாவிலும் தொடங்கப்படும்!- பிரதமர்

793
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சி சபா மாநிலத்திலும் தொடங்கப்படும் என பிரதமர் துன் மகாதீர் முகமட் உறுதிபடுத்தினார். பெர்சாத்து கட்சியில் இணைய இருப்போரைப் பற்றி நன்கு ஆராய்ந்த பின்னரே கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என அவர் கூறினார்.

நாங்கள் அமைத்துள்ள மூன்று நிபந்தனைகளை கட்சியில் இணைய இருப்போர் பின்பற்ற வேண்டும். அதாவது அவர்கள் அம்னோவை விட்டு முதலில் வெளியேற வேண்டும். பின்பு, சில காலத்திற்கு சுயேச்சை பிரதிநிதியாக செயல்பட வேண்டும். அக்கால அவகாசம் முடிந்ததும், அவர்கள் தனித்தனியாக இறுக்கமான தேர்வு செயல்முறைக்கு உட்படுத்தப்படுவார்கள்என்று பிரதமர் கூறினார்.

சபாவில் இயங்கிக் கொண்டிருக்கும் வாரிசான் கட்சிக்குப் போட்டியாக பெர்சாத்து கட்சி இயங்காது என பிரதமர் தெளிவுப் படுத்தினார்.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் குறித்து தாம் வாரிசான் உயர்மட்ட தலைவர்களிடம் பேச வேண்டிய அவசியமில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.