Home நாடு செமினி: குழப்பத்தில் இருக்கும் வாக்காளர்களை நம்பிக்கைக் கூட்டணி குறி வைக்கும்!

செமினி: குழப்பத்தில் இருக்கும் வாக்காளர்களை நம்பிக்கைக் கூட்டணி குறி வைக்கும்!

1049
0
SHARE
Ad

ஷா அலாம்: செமினி இடைத் தேர்தலுக்கான, நம்பிக்கைக் கூட்டணி தேர்தல் இயந்திரம், இன்னும் குழப்பத்தில் இருக்கும் வாக்காளர்களை குறி வைக்கும் என சிலாங்கூர் மாநில நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

வருகிற மார்ச் மாதம் 2-ஆம் தேதி நடைபெற இருக்கும் இடைத் தேர்தலில், நம்பிக்கைக் கூட்டணியின் வெற்றியை முடிவு செய்யும் மாபெரும் சக்தியாக இக்குழுவினர் உள்ளனர் என அவர் உறுதிபடக் கூறினார்.

இன்ஸ்டிடுட் டாருல் ஏசான் நடத்திய தேர்தல் கணக்கெடுப்பை முன்னுதாரணமாக குறிப்பிட்டுக் கூறிய அமிருடின், வெறும் 9 விழுக்காடு வித்தியாசத்தில் தேசிய முன்னணி அருகில் இருப்பது ஆபத்துக்குறியது என அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நாளை சனிக்கிழமை செமினி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற இருக்கும் வேளையில், பிப்ரவரி 26-ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பு நடத்தப்படும்.