Home நாடு செமினி: அரசாங்க நிகழ்ச்சிகள் சட்டத்திற்கு உட்பட்டிருந்தால், ஏற்பாடு செய்யலாம்!- தேர்தல் ஆணையம்

செமினி: அரசாங்க நிகழ்ச்சிகள் சட்டத்திற்கு உட்பட்டிருந்தால், ஏற்பாடு செய்யலாம்!- தேர்தல் ஆணையம்

599
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தற்போது செமினியில் நடைபெற்று வரும் அரசாங்கம் சார்ந்த நிகழ்ச்சிகள் வாக்குகளைப் பெறுவதற்கான நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அது தவறு என தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார். அவ்வாறு இல்லாத போது, அரசாங்கத்தின் அந்நடவடிக்கைகள் தேர்தல் சட்டத்திற்கு உட்பட்டே நடக்கிறது எனக் கருத வேண்டும் என அவர் கூறினார்.

மேலும் பேசிய அசார், நம்பிக்கைக் கூட்டணி இன்னும் ஆட்சியில் இருப்பதாகவும், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு கலைக்கப்படாத சூழலும் நிலவுவதால், அவ்வாறான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தவறாகாது என அவர் குறிப்பிட்டார்.  

ஆயினும், ஒரு வேளை இந்நிகழ்ச்சிகள் குறித்து வழக்கு தொடுக்கப்பட்டால், அதற்கு நீதிமன்றமே சிறந்த ஒரு பதிலை தர இயலும் என அவர் தெரிவித்தார்.