Home கலை உலகம் பேராக் வானொலி நேயர்கள் முன்னிலையில் இசை.மை ஒலிப்பதிவு

பேராக் வானொலி நேயர்கள் முன்னிலையில் இசை.மை ஒலிப்பதிவு

999
0
SHARE
Ad

ஈப்போ – இசை, பாடல் துறையில் உள்ளூர்க் கலைஞர்களுக்கான ஊக்குவிப்பு தளமாக விளங்கும் இசை. மை (isai.my) நிகழ்ச்சி, அண்மையில் (2 பிப்ரவரி 2019) பேராக் மாநிலத் தலைநகர்  ஈப்போவில் உள்ள ஆர்டிஎம் அரங்கில் வானொலி நேயர்களின் முன்னிலையில், அவர்களின் உற்சாக வரவேற்புடன் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

உள்ளூர்க் கலைஞர்களான ஜெய், திலிப்வர்மன், ஜெஸி ,சதிஸ், பிரியா, ஈப்போ கலைஞர் விக்னேஸ் ஆகியோர் பங்கு கொண்டு வருகை தந்திருந்த நேயர்களை தங்களின் படைப்புகளின் வழி மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

“உங்கள்திறமை” அங்கத்தில் நேயர்களும் பங்கு கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்தினர்.

#TamilSchoolmychoice

அறிவிப்பாளர்கள் தெய்வீகன்,  புவனா இருவரும் சுமார் 3 மணிநேர நிகழ்ச்சியைக் கலகலப்பாக வழிநடத்தினர். முதன் முறையாக கோலாலம்பூருக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட இசை.மை இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாக தயாரிப்பாளர் ரவின் சண்முகம் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் வழி முதன் முறையாகத் தங்களுக்குப் பிடித்த உள்ளூர் கலைஞர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பையும் இரசிகர்கள் பெற்றனர்.
இசை.மை நிகழ்ச்சி, மற்ற மாநிலங்களிலும் பதிவு செய்யப்படும்.

அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரவின் தெரிவித்தார்.
இசை.மை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை மணி 11.30 தொடங்கி நண்பகல் 12 மணிவரை ஒலியேறுகின்றது.