Home நாடு நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றால் அரசாங்கத்தின் திட்டங்கள் தொடரும்!

நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றால் அரசாங்கத்தின் திட்டங்கள் தொடரும்!

766
0
SHARE
Ad

கோலாலம்பூர்: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் வெற்றிக் கண்டால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் மக்களால் எழுப்பப்பட்ட விவகாரங்களை நம்பிக்கைக் கூட்டணி அரசு தீர்த்து வைப்பதோடு தொடர்ந்து திட்டங்களை துரிதப்படுத்தும் என நம்பிக்கைக் கூட்டணி துணைத் தலைவர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரான முகமட் அய்மான் சாய்னாலியை செமினி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுப்பதால், அங்குள்ள பிரச்சனைகளை மத்திய அரசின் ஆதரவுடன் இலகுவாக சரிசெய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.

பெர்சாத்து கட்சியின் தலைவருமான மொகிதின் கூறுகையில், செமினி சட்டமன்றத்தில் நிலவி வரும் ஒரு சில பிரச்சனைகளை தாங்கள் கண்டறிந்துள்ளதாகவும், குறிப்பாக, சாலை பழுது பிரச்சனை, பொது போக்குவரத்து, வெள்ளம், மற்றும் சுகாதார மையங்கள் போன்ற பிரச்சனைகளை உன்னிப்பாக கவனித்து அவற்றை தீர்த்து வைப்பதற்கு முயற்சிகள் எடுக்கபடும் எனவும் அவர் தெரிவித்தார்.