Home நாடு செமினி: இடைத் தேர்தலில் பாஸ் அம்னோவிற்கு ஆதரவு அளிக்காது!- மகாதீர்

செமினி: இடைத் தேர்தலில் பாஸ் அம்னோவிற்கு ஆதரவு அளிக்காது!- மகாதீர்

728
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை நடைபெற்ற செமினி சட்டமன்ற வேட்புமனு தாக்கலில் தேசிய முன்னணிக்கு ஆதரவாக பாஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் களம் இறங்கினர். ஆயினும், அதற்கு பின்னராக, பாஸ் கட்சி வரும் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் அம்னோ கட்சிக்கு ஆதரவாக இருக்காது என பிரதமர் மகாதீர் முகமட் அதிர்ச்சி தரக்கூடிய தகவலை வெளியிட்டதாக மலேசியா கினி இணையத்தளச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை), பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங், பிரதமரை அவரது அலுவலகத்தில் சந்தித்து இது குறித்து தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து ஹாடி அவாங் எழுதி கையோப்பமிட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பிரதமரை கடுமையாக விமர்சிக்க கூடிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஹாடியும் ஒருவர்.