Home நாடு ‘மகாதீர் பதவி விலகவும், அன்வார் நாட்டின் 8-வது பிரதமர்’ பதாகை கண்டெடுப்பு!

‘மகாதீர் பதவி விலகவும், அன்வார் நாட்டின் 8-வது பிரதமர்’ பதாகை கண்டெடுப்பு!

793
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ‘மகாதீர் பதவி விலகவும், அன்வார் நாட்டின் 8-வது பிரதமர்’ எனும் தகவலைத் தாங்கிய இரு பதாகைகள் பங்சார் மற்றும் தாமான் பெர்மாதாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப்பதாகைகளில் அன்வாரின் படமும் பிகேஆர் கட்சியின் சின்னமும் அச்சிடப்பட்டிருந்தன.

ஆயினும், இச்செயலை யார் செய்ததென்று இதுவரையிலும் தெரியவில்லை. பிகேஆர் கட்சியினர் இது குறித்து காவல் துறையில் புகார் செய்துள்ளதாக லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாமி பாசில் கூறினார். கண்டிப்பாக இது நம்பிக்கைக் கூட்டணி அரசின் அரசியல் எதிரிகளின் செயலாக இருக்கலாம் என அவர் கூறினார்.

இதற்கிடையே, பிரதமர் மகாதீரை பதவியை விட்டு அகற்ற சதி வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என பாஸ் கட்சி இரு கட்சிகள் மீது குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.