குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திந்துப் பேசிய இளவரசர் சல்மான், இந்தியா மற்றும் சவுதி நாடுகளுக்கிடையே நன்மைத் தரக்கூடிய செயல்களை ஏற்படுத்தும் திட்டங்களை ஏற்படுத்துவோம் என உறுதிக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், சவுதி இளவரசரும் சந்திக்க உள்ளனர். இச்சந்திப்பில் புல்வாமா தாக்குதலினால் இந்தியா, பாகிஸ்தான் உறவில் ஏற்பட்ட விரிசல் குறித்தும், தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்படும் என நம்பப்படுகிறது.
மேலும், இந்தியாவுக்கும் சவுதிக்கும் இடையே பாதுகாப்பு, மருத்துவம், எண்ணெய் முதலீடு சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேசப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.