Home நாடு செமினி: இளம் வேட்பாளர்களுக்கு ஆதரவு அதிகம்!

செமினி: இளம் வேட்பாளர்களுக்கு ஆதரவு அதிகம்!

1036
0
SHARE
Ad

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் இம்முறை இரு இளைஞர்கள் களத்தில் இறங்கியிருப்பது, அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக பெர்னாமா செய்தி குறிப்பிட்டுள்ளது.

நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து 30 வயது நிரம்பிய அய்மான் சாய்னாலி, மற்றும் பிஎஸ்எம் கட்சியைப் பிரதிநிதித்து, 25 வயது, நிக் அசிஸ் அபிக் அப்துல் , செமினி இடைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் இரு இளைஞர்களாவர். பல்வேறு தூற்றுதலுக்கு மத்தியில், மக்களின் கவனம் இவர்களது பக்கம் இருப்பது பெர்னாமா நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்விரு வேட்பாளர்களும் பொதுமக்களைச் சந்திக்கும் போது, மன தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் காணப்படுகின்றனர். மக்களின் பிரச்சனைகளை பொறுமையாக கேட்டு உள்வாங்கும் தன்மையும் இவர்களிடத்தில் காணப்படுகிறது.

#TamilSchoolmychoice

இளம் வயது வேட்பாளர்கள் உள்ளூர் அரசியலில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தலாம் எனும் ஆழமான நம்பிக்கை, இப்பகுதி இளைய தலைமுறையினருக்கு இருப்பதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.