Home இந்தியா டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பில் மோடிக்கு 84% பேர் ஆதரவு

டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பில் மோடிக்கு 84% பேர் ஆதரவு

982
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி, டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் இணைய கருத்து கணிப்பு ஒன்றினை தொடக்கியது. வருகிற லோக்சபா தேர்தலில் மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வேண்டுமா இல்லையா எனும் அக்கருத்துக் கணிப்பில், 83.89 விழுக்காட்டினர் அதற்கு ஆதரவு அளித்து வாக்களித்துள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டு மோடியின் ஆட்சி நிலைக் குறித்து சில முக்கிய கேள்விகளை முன்வைத்து டைம்ஸ் ஆப் இந்தியா சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பு, பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையிலும் ஒன்பது மொழிகளில் நடத்தப்பட்டது.

ஆயினும், இந்த கருத்து கணிப்பு வெளியானதும், சமூக ஊடங்களில் வழக்கம் போல் மோடியைத் தாக்கியும், இந்தக் கருத்துக் கணிப்பு ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் மக்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.