Home வணிகம்/தொழில் நுட்பம் பாதுகாப்பு அம்சங்களுடன் டிக்டாக் செயலி மேம்படுத்தப்படும்!

பாதுகாப்பு அம்சங்களுடன் டிக்டாக் செயலி மேம்படுத்தப்படும்!

980
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தில் டிக்டாக் செயலி தடை செய்யப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதனை அடுத்து, அந்த செயலி ஒரு சில பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்படும் என டிக்டாக் செயலியை நிருவகித்து வரும் பைட் டான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்திய மக்களிடம் இந்த செயலி, வரம்பு மீறிய ஆபாசத்தை உருவாக்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. டிக்டாக் செயலி தடை செய்யப்படும் எனும் செய்தியைக் கேட்டு, ஒரு சில பயன்பாட்டாளர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் டிக்டாக் செயலியில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படும் என பைட் டான்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும், டிக்டாக் செயலியில் கடுமையான நடைமுறைகள் கொண்டுவரப்படும் எனவும் அது உறுதியளித்துள்ளது