Home நாடு “அம்னோதான் மலாய்காரர்களை ஏமாற்றியது, நம்பிக்கைக் கூட்டணி அல்ல!”- அஸ்மின்

“அம்னோதான் மலாய்காரர்களை ஏமாற்றியது, நம்பிக்கைக் கூட்டணி அல்ல!”- அஸ்மின்

932
0
SHARE
Ad

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் நெருங்கி வருகிற வேளையில், தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொண்டு வருவது கண்கூடு.

செமினி இடைத் தேர்தலில் மலாய்க்காரர்களின் வாக்குகள் பெருமளவில் வெற்றியாளரை முடிவு செய்ய இருக்கும் வேளையில், முக்கிய இரண்டு கூட்டணிகளும் மலாய்க்காரர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காகப் பாடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே, மலாய்க்காரர்களின் நலனில் நம்பிக்கைக் கூட்டணி அரசு முக்கியத்துவம் செலுத்தவில்லை எனும் ஒரு சாராரின் குற்றச்சாட்டை பிகேஆர் கட்சித் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி மறுத்தார். தேசிய முன்னணி ஆட்சியின் போது, குறிப்பாக அம்னோ கட்சியால்தான், மலாய்க்காரர்கள் பெருமளவு ஏமாற்றப்பட்டதாகவும், அதற்குச் சான்றாக தாபோங் ஹாஜியையும், பெல்டாவையும் முன்வைத்துப் பேசினார்.

#TamilSchoolmychoice

இம்மாதிரியான ஏமாற்று வேலைகளை நம்பிக்கைக் கூட்டணி அரசுதான் கண்டறிந்து அவர்களை தற்போது நீதியின் முன்பு நிறுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான சூழலில், நம்பிக்கைக் கூட்டணி அரசு மலாய்க்காரர்களின் நலனில் அக்கறைச் செலுத்தவில்லை எனும் வாதம் அர்த்தமற்றது என அவர் செமினியில் நடந்த பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.