Home இந்தியா ரஜினிகாந்த் தம்மை ஆதரிப்பார் என நம்பும் கமல்ஹாசன்!

ரஜினிகாந்த் தம்மை ஆதரிப்பார் என நம்பும் கமல்ஹாசன்!

761
0
SHARE
Ad

சென்னை: மக்களவைத் தேர்தலில் ரஜினி தமக்கு ஆதரவு அளிப்பார் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் ஓர் அணியாக இருந்து செயல்படும் என தாம் கூறியதாகவும், மூன்றாவது அணியாக இயங்கப் போவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என அவர் தெளிவுப்படுத்தினார்.

ரஜினி, சீமானின் ஆதரவு தமக்கு கிடைக்கும் என தாம் நம்புவதாக கமல்ஹாசன் கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, சட்டப்பேரவைத்தேர்தலை இலக்காகக் கொண்டு, ரஜினிகாந்த் போட்டியிடப்போவதாகவும், வேறு எந்தக் கட்சிகளுக்கும் ஆதரவு தரப்போவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.