Home இந்தியா மேல் திருப்பதிக்கு நடந்தே சென்ற ராகுல் காந்தி

மேல் திருப்பதிக்கு நடந்தே சென்ற ராகுல் காந்தி

794
0
SHARE
Ad

திருப்பதி – ஆந்திரா மாநிலத்துக்கு வருகை தந்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று திருப்பதி கோவிலுக்கு வருகை தந்து கீழ்த் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதிக்கு நடைப் பயணம் மேற்கொண்டு தரிசனம் செய்தார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி ராகுல் காந்தி இந்த நடைப் பயணம் மேற்கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா வந்தடைந்த ராகுல்காந்தி, சாலை வழியாக கீழ் திருப்பதிக்கு வந்து, பின்னர் அங்கிருந்து திருமலைக்கு பாதயாத்திரை மேற்கொண்டார். பக்தர்களுடன் இணைந்து அவர் மேல்திருப்பதிக்கு நடந்து சென்றதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு வாழ்த்துகளும் தெரிவித்தனர்.