Home இந்தியா விழுப்புரம் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் காலமானார்

விழுப்புரம் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் காலமானார்

1092
0
SHARE
Ad

சென்னை – அதிமுக கட்சியைச் சேர்ந்த விழுப்புரம் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.இராஜேந்திரன் (படம்) திண்டிவனம் அருகே கார் விபத்தொன்றில் இன்று சனிக்கிழமை காலை காலமானார்.  விழுப்புரம்- திண்டிவனம் சாலையில் தடுப்புச்சுவரில் சென்னை நோக்கி அவர் பயணம் செய்த கார் மோதிய விபத்தில் இராஜேந்திரன் பலியானார்.

அவருக்கு வயது 62. இராஜேந்திரன் நல்லுடலுக்கு  சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.