Home கலை உலகம் பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு அடுத்து எல்.கே.ஜி படம் வசூல் சாதனை!

பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு அடுத்து எல்.கே.ஜி படம் வசூல் சாதனை!

1311
0
SHARE
Ad

சென்னை: கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி வெளியான எல்.கே.ஜி திரைப்படம் பொங்கலுக்கு வெளியான பேட்ட, விஸ்வாசம் படத்திற்கு பிறகு அதிக வசூல் கண்டப் படமாகக் குறிப்பிடப்படுகிறது. ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த் நடித்துள்ள இந்தப் படத்தை கே.ஆர்.பிரபு இயக்கியுள்ளார்.

தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, முதல் மூன்று நாட்களிலேயே 9 கோடி ரூபாய் வசூலைப் படைத்தது எனக் கூறப்படுகிறது.

பிரபல நடிகர்கள் எவரும் நடிக்காத இந்தப் படத்தை, வெரும் நகைச்சுவையை மட்டும் நம்பி இப்படக்குழுவினர் களத்தில் இறங்கியுள்ளனர். அதற்கான, வெற்றியும் தற்போது இப்படக்குழுவினர் பெற்றுள்ளனர்.