இவர் தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக ”அரிமா நம்பி”, விமல் ஜோடியாக ”ஒரு ஊர்வல ரெண்டு ராஜா”, அதர்வாவுடன் ”இரும்புக் குதிரை”, கவுதம் கார்த்திக்குடன் ”வைராஜாவை” படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரியா ஆனந்தும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், அத்தகவலை மறுத்துள்ளார் பிரியா ஆனந்த்.
‘3′ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இசையமைப்பாளர் அனிருத், தனது முதல் படத்திலேயே கொலைவெறி பாடலைத் தந்து முன்னணி இசையமைப்பாளர் அந்தஸ்த்தைப் பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து அனிருத்தும், நடிகை ஆண்ட்ரியாவும் காதலிப்பதாக இணையத்தில் புகைப்படங்களுடன் செய்தி பரவியது. பின்னர், இருவரும் பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இத்தகவலை பிரியா ஆனந்த் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, ‘என்னையும் அனிருத்தையும் இணைத்து வதந்திகள் பரவியுள்ளன. இதில் துளியும் உண்மை இல்லை.
நாங்கள் இருவரும் நண்பர்களாகத்தான் பழகுகிறோம். வேறு எந்த உறவும் எங்களுக்குள் இல்லை. இது போன்று வதந்திகள் பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என பிரியா ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.